Blog எழுதணும்னு வந்து விட்டாலும் எங்கு எப்படி ஆரம்பிப்பது என starting troble இருந்தது. இடையில் ஆணி வேற அதிகம். கொஞ்சம் நேரம் கிடைத்த பொழுது சரியாக " சர்வதேச மகளிர் தினம் ". ஊரெங்கும் கொண்டாட்டமாக இருக்க, நானும் ரொம்ப நாளாக என் மனதில் தோன்றியதை எழுத ஆசைப்படுகிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வியந்து போற்றுவது என் பாட்டி (தந்தையின் தாய்). சிறு வயதிலேயே தாயை இழந்து குடும்ப பாரத்தை அறிந்தவர். அந்த கால வழக்கம் போல வயது டபுள் digit வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டது. பெரிய குடும்பம், கோபக்கார கணவர், அதிக உதவி இல்லாத பிறந்தகம் என இருந்த போதும் அதை நிறைவாக ஏற்று வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. ஆனால் அதிலும் மண் விழுந்தது. பதினைந்து நாட்களுக்குள் வீட்டில் மூவர் (மாமியார், பெரிய கொழுந்தனார், கணவர் ) "பெரிய" நோயால் இறந்தனர். அப்பொழுது என் அப்பாவிற்கு பத்து மாதம். அன்றிலிருந்து எங்கள் பாட்டி இறக்கும் வரை (92 வயது) ஒரு கர்ம யோகியாக வாழ்ந்து காட்டினார்.
அந்த காலத்தில் சிறிய வயதில் இருந்த தீர்க்க தரிசனைத்தை என்னென்று சொல்வது ! ஊருளிலுள்ள சொத்துக்கள், நகைகள் எது போனாலும் பரவாயில்லை ஆனால் படிப்பு ஒன்றே தன் மகனுக்கு நிலையான சொத்து என அறிந்து அதில் வெற்றியும் பெற்றார். அந்த முடிவு இன்று பல தலைமுறைகளை காக்கின்றது. என்ன ஆனாலும் காலை 4 மணிக்கு எழுந்து இரவு படுக்கும் வரை ஓயாது உழைப்பு, ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டார். தாயும் மகனும் ஒன்றாக உட்கார்ந்து பேச கூட மாட்டார்கள். ஆனால் அந்த அன்பை உணரத்தான் முடியும்.
தனது 80 வது வயதில் கீழே விழுந்து கோமா நிலையில் இருந்து மீண்டு வந்தது என் பாட்டியின் மன உறுதியே, ஏனென்றால் அப்பொழுதுதான் நாங்கள் புது வீடு கட்டி இருந்தோம் - தன்னால் அந்த வீட்டிற்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதால்.(எங்கள் தாய்க்கு சொந்த வீடு என்பது மிகப் பெரிய ஆசை) கடைசி வரை மருமகளை மகளாக பாவித்து, ஒரே வீட்டில் சம்மந்திகள் ஒற்றுமையாய் வாழ்ந்தது ( என் தாயும் ஒரே பெண் ) என பல ஆச்சரியங்கள். தாய் வழி பாட்டி இவரை போல் இல்லா விட்டாலும் மிக வித்தியாசமானவர். அவரைப் பற்றி வேறொரு பதிவில் காணலாம் ( "அப்பாடா" - காதில் விழுகிறது). தவறு செய்யும் பொழுது கூட அதை வேண்டாம் என மிக இனிமையான முறையில் கூறி கேட்கும் வண்ணம் செய்ய ஆளுமை இருந்தது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்பொழுதுதான் " உண்மைத் தமிழனின் " கஷ்டம் புரிகிறது.
அடிக்கடி என் பாட்டி " நான் சொல்றதோட அருமை இப்போ தெரியாது, பின்னாடி நீயே புரிஞ்சுப்பே" எனும் பொழுது சிரித்து விட்டு சென்று விடுவேன். இப்போ நினைக்காத நேரமில்லை.
பாட்டி - Hats off !
I, Sharmi, Diamond. Ep 29
-
29. Sharmi
My whole body ached. I felt beaten up. Yesterday's work was excessive. The
unexpected guest was very rough. Moreover, I felt a disturbance in ...
1 week ago
சூப்பர் பாட்டி!
ReplyDeleteவருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி அபி அப்பா.
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி
ரொம்ப ரசிச்சு படித்தேன்
ReplyDeleteமனுசங்க மேலுள்ள காதல்தான் இந்த உலகத்தையே இயக்குது
உங்கள் பதிவு அருமை
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
ரொம்ப நன்றி கார்த்திகேயன்.
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி