Wednesday, January 28, 2009

எல்லோருக்கும் வணக்கம்.
வெற்றிகரமாக பதிவுலகத்தில் காலடி எடுத்து வைச்சாச்சு. இந்த புது உணர்வு நல்லா இருக்கு. சைக்கிள், அல்லது வண்டி புதிதாக ஓட்டும் போது ஏற்படும் சந்தோசம், த்ரில் கிடைக்கிறது. இந்த பதிவுலகத்தில் உண்மையாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள ஆசை. விரைவில் தமிழில் எழுத முயற்சிப்பேன்.

இது நான் முதலாக எழுதிய பதிவின் தமிழாக்கம். " தமிழ் மணத்தின்" கட்டாயம்.
அன்புடன்
மாசற்ற கொடி

23 comments:

  1. hi,

    Welcome to the blogdom and all the very best.

    தமிழிலும் எழுதவும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. இது உங்க உண்மைப் பெயரா புனைப் பெயரா?

    உண்மைப் பெயெரெனில் பெயரிட்டவருக்கு வாழ்த்துக்கள்.

    புனைப் பெயெரெனில் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வருகைக்கும் தெம்பு தரும் வார்த்தைகளகும் நன்றி அனுஜன்யா


    மிக்க நன்றி வேலன் அண்ணாச்சி. புனை பெயர்தான்.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  4. அட மாசற்ற கொடி! நல்ல பேர்! அதை உங்களுக்கே நீங்க வச்சிகிட்டதுக்கு நெம்ப நன்றி லதா!:-))

    ReplyDelete
  5. வாவ் ! சூப்பர் அபி அப்பா ! பாதி சரி - மீதிய கண்டு பிடிக்க முடியுமா ? சீனியர் பதிவரான உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  6. அட நான் சும்மா ஒரு கிண்டலுக்காக சொன்னேன்ப்பா:-))

    நீங்க இன்னும் குழப்பிட்டீங்களே!

    ReplyDelete
  7. 'மாசற்ற கொடி' பெயர் அழகாகவும் அருமையாகவும் இருக்கின்றது. புதிய உலகிற்கு வரவேற்புடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஆஹா ! அபி அப்பா,
    இதுக்கு பேர்தான் போட்டு வாங்கறதா - நிறைய கத்துக்கனும் !

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  9. வாசவன்,
    உங்கள் பெயரும் வித்தியாசமாக உள்ளது. வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி முரளி கண்ணன். என்னால நம்பவே முடியல! உங்களின் அனேக பதிவுகளை ரசித்து படிக்கறேன். கவுண்டரை அவ்வளவாக ரசித்தது இல்லை என்றாலும் உங்கள் பதிவை பார்த்து வியந்து போனேன்.

    Follwer ஆனதற்கும் நன்றி. விரைவில் எழுதுகிறேன் (பயபடாதீர்கள் !)

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  11. அழகான பெயருடன் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    நல்ல பல பதிவுகளைத் தாருங்கள்.

    தமிழில் எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.

    இ கலப்பை அல்லது என்.ஹெச்.எம் செயலியை துணை கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. Please remove word verification in your comment moderation settings.

    ReplyDelete
  13. மாசற்ற கொடி!
    வருக!
    வருக!!
    நிறைய எழுதலாம்
    நீங்க!
    NHM writer- google search
    போய் டவுன்லோட்
    பண்ணுங்க!!!
    ரொம்ப ஈஸியா எழுதலாம்..

    தேவா..

    ReplyDelete
  14. நன்றி அறிவன். The word verification has been removed. (But generally people say - it is better to have that because of Spam).


    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  15. நன்றி தேவா. இப்போ கொஞ்சம் ஆணி அதிகம். இல்லாவிட்டாலும் நான் கொஞ்சம்(!) slow தான். கூடிய விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.


    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  16. அபியப்பா.. இவங்கதானா அவங்க? நானும் ரொம்ப குழம்பி போயிருந்தேன்.. கண்டு பிடிச்சிட்டோம்ல.. :))

    ReplyDelete
  17. சஞ்சய்,

    நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை - வருகைக்கு நன்றி.


    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  18. நான் ஒன்னுமே நினைக்கலையே. சும்மா அபிஅப்பா பாணியில கமெண்ட் போட்டேன்.. ரென்ஷன் ஆவாதிங்க.. :)

    ReplyDelete
  19. //Untitled//

    இதென்ன கெட்டப் பழக்கம்? :(

    ReplyDelete
  20. சஞ்சய்,

    நானா ? டென்ஷனா ? நோ நோ. அப்படி பதில் சொன்னதால்தான நீங்க திரும்பவும் வந்தீங்க !!!

    அந்த கெட்ட பழக்கத்தை நீங்களும் follow பண்ணீட்டீங்க போல !

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  21. //கொடி வளர (களை எடுத்தாலும் சரி, தண்ணீர் விட்டாலும் சரி - மகிழ்ச்சியே !)//

    Super. Congrats.

    ReplyDelete
  22. நன்றி ராதா மாதவ். புரியுது, மொத்த பதிவுலயும் இதான் நல்லா இருக்கு ன்னு சொல்றிங்க ! உங்க பதிவுகளில் காமெடியும் படங்களும் அருமை.


    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete

கொடி வளர (களை எடுத்தாலும் சரி, தண்ணீர் விட்டாலும் சரி - மகிழ்ச்சியே !)